Search This Blog

Sunday, April 15, 2018

நாட்கொலை!


மௌனம் பேசிய நடு இரவு!
கண்ணெதிரே சுவற்றில்
இருப்பதற்காய் போராடி
துடிதுடித்து
முடிவில்
சடலமாய்
சரிகிறது
அன்றைய நாட்காட்டி!
சரிந்து விட்ட நாளில்
சாதித்தது என்ன?
திட்டமிட்டு
கொலையொன்றை
செய்துவிட்ட திருப்தி!

No comments:

Post a Comment