Search This Blog

Friday, October 1, 2010

தோழி

நீயும் நானும்
ஒரே சாதி
உணர்வுகள் ஒன்றி விட்டதால்!
அருகில் இல்லை என்றாலும்
ஆழமாய் இருக்கிறோம்
உன் உள்ளத்தில் நானும்
என் உள்ளத்தில் நீயும்!
உன் நினைவுகளை
உறங்கச் சொன்னால்
அதுவும்
தூங்க மறுக்கும்
குழந்தையைப் போல
அடம் பிடித்து
ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரு தடத்தில் சென்றாலும்
ஒரு வழி
நோக்கிச் செல்லும்
இரயில் பெட்டியாய்
இணையாது சென்றாலும்
இணைந்தே செல்லும்
அதிசயப் பிறவி
நீயும் நானும்!
பொய் முகங்கள் பேசுகின்ற
போலி வார்த்தைகள் இல்லாத
நீ
தோள்சாய
இடம் தேடிய எனக்குத்
தோழியாய்!

No comments:

Post a Comment