பெண்ணே!
நீ சுதந்திரப் பெண்ணாமே!
ஆண்டாண்டு காலமாய்
அடிமைப்பட்டுக் கிடந்த
பெண்ணினம்
இன்று
சுதந்திரப் பெற்றுவிட்டதாம்!
ஒரு விலங்கைக்
களைகிறேன் என்று சொல்லி
மற்றொரு விலங்கையும்
அல்லவா
பூட்டிக் கொண்டாய்!
சுமைகள் அதிகம் தாங்குவதால்
நீ
சுமைதாங்கி அல்ல!
இச்சமுதாயம்
உனக்குச் சூட்டியுள்ள பெயர்
சுதந்திரப்பெண்!